போலிச் செய்திகளால் இந்தியாவுக்கு ஆபத்து- உலக பொருளாதார மன்றம்

Sinoj

திங்கள், 29 ஜனவரி 2024 (19:03 IST)
இந்தியாவுக்கு போலிச் செய்திகளால் ஆபத்து உள்ளதாக உலகப் பொருளாதார மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு World Economic  Forum  செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் கல்வி வாணிபம், அரசு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 1490 நிபுணர்களிடம் ஒரு ஆய்வு நடத்தியது.

அதில்,  அந்த நிபுணர்களின் கருத்தின்படி, 2024 ஆம் ஆண்டில் உலக நாடுகள் சந்திக்க வேண்டியவை என 34 ஆபத்துகளை உலகப் பொருளாதார மன்றம் அட்டவணையிட்டுள்ளது. அவற்றில் போலிச் செய்திகளும் ஒன்றாகும்.

அந்த 34 ஆபத்துகளில் போலிச் செய்திகள் எந்த நாட்டிற்கு அதிக ஆபத்துகள் உருவாகும் என்ற பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்