தமிழகத்தில் மே 31 வரை பொதுஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் அற்விப்பு

ஞாயிறு, 17 மே 2020 (15:12 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்டமாக மேலும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்றுடன் மூன்றாவது கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில், 4 வது கட்ட ஊரடங்கு முற்றிலும் புதியதாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் நாள்தோறும் கொரோனோ பாதிப்பால் மக்கள் அதிகம் பாதிப்படைந்து வருகின்றனர்.  குறிப்பாக தலைநகர் சென்னையில் பாதிக்கப்படுவோரொன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி  4 வது கட்ட பொது ஊரடங்கை அறிவித்துள்ளார். அதில்  வரும் மே 31 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இந்த ஊரடங்கின் போது தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 சதவீத பணியாளர்கள் பணியாற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் அத்தியாவசிய பணிகளுக்கு டாக்ஸி, வாடகை வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்ட்டுள்ளது.
 
பனிரெண்டாம் வகுப்பு  பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு அனுமதி!
 
குறிப்பாக சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 50% தொழிலாளர்களுடன் ஆலைகள் இயங்கலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்