முதல்வர் வீடு அருகே கொசு உற்பத்தி? - அபராதம் விதிக்கப்படுமா?

வெள்ளி, 27 அக்டோபர் 2017 (11:01 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீடு அருகே கொசுக்கள் உற்பத்தியாகும் சாக்கடையின் புகைப்படம் வெளியாகியுள்ளது.


 

 
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகமாக உள்ளது. தினந்தோறும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 5க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக சேலம், சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலில் ஏராளமனோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
எனவே, டெங்குவை கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், பல இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். தண்ணீர் தேங்கிர்யிருந்து, கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் இருந்தால் அந்த இடத்திற்கு சொந்தமானவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில், முதல்வர் பழனிச்சாமியின் வீட்டிற்கு செல்ல திரும்பும் இடத்தில் ஒரு சாக்கடை வெகுநாட்களாக தேங்கியுள்ளதாகவும்,, அதில் கொசுக்கள் மொத்தமாக உற்பத்தியாகிறது எனவும், இதற்காக ஏதும் அபராதம் விதிக்கப்படுமா? என கேள்வி எழுப்பி சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்