தமிழகம் போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாற தி.மு.க அரசே காரணம்: ஈபிஎஸ்

Mahendran

வெள்ளி, 1 மார்ச் 2024 (11:30 IST)
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வரும் நிலையில் இதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, தமிழகம் போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாற தி.மு.க அரசே காரணம் என குற்றஞ்சாட்டினார்.

அவர் இதுகுறித்து பேசியபோது, ‘தமிழகத்தில் தான் அதிக அளவில் கஞ்சா விற்கிறது. தி.மு.கவை சேர்ந்த மாநில பொறுப்பாளர் ரூ. 2,000 கோடி மதிப்பிலான போதை பொருளை வெளிநாட்டிற்கு கடத்துகிறார் என்றால், தமிழகம் போதை பொருள்கள் நிறைந்த மாநிலமாக மாற இந்த விடியா தி.மு.க அரசு காரணமாக உள்ளது.

இதை மத்திய அரசு உரிய கவனம் செலுத்தி, இதில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.  வரும் தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்று விட்டால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது” என்று கூறினார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்