கோடி கோடியாய் கேட்கும் எடப்பாடியார்: திகைத்து போன மோடி!

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (15:41 IST)
பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். 
 
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்து வரும் நிலையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடுத்துரைத்தார். 
 
மேலும் தமிழகத்திற்கு தேவையான கோரிக்கைகளையும் முதலமைச்சர் முன்வைக்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது, 
 
நிலுவையில் உள்ள ஏப்ரல் - ஜுன் மாத ஜிஎஸ்டி தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் 
 
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு சிறப்பு நிதியாக 9000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் 
 
கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் 
 
நெல் கொள்முதல் செய்ய வேண்டி ரூ.1,321 கோடி ஒதுக்க வேண்டும் 
 
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1,000 கோடி அளிக்க வேண்டும்
 
சிறு, குறு நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக ரூ.1,000 கோடி மத்திய அரசு ஒதுக்க வேண்டும் 
 
உயர்தர வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு நிதியளிக்க வேண்டும்
 
தமிழ்நாட்டில் பிசிஆர் சோதனைக்கான செலவின் 50 சதவீதத்தை பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வழங்க வேண்டும் 
 
நவம்பர் வரை ரேசன் கடைகளில் வழங்க 55, 637 மெட்ரிக் டன் பருப்பு தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்