அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து தமிழக அரசின் வழக்கு: நாளை தீர்ப்பு

திங்கள், 27 நவம்பர் 2023 (16:53 IST)
ஐஏஎஸ் அதிகாரிகள் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இரு தரப்பு வாத பிரதிவாதங்கள் முடிவடைந்ததை அடுத்து நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது.

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சமீபத்தில் சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது தமிழ்நாட்டில் மட்டும் மணல் குவாரி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி அமலாக்க துறையின் செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது என்றும் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிம வளம் சட்டம் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

 மேலும் ஆட்சியாளர்கள் ஆட்சியர்களிடம் ஆவணங்கள் கேட்பதற்கும் சம்மன் அனுப்புவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்றும் நீதிபதிகள் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்