1000 கிலோ நாய்க்கறி சர்ச்சை: அடி வாங்கிய அசைவ உணவகங்கள்

திங்கள், 19 நவம்பர் 2018 (17:00 IST)
சென்னையில் நேற்று 1000 கிலோ நாய்க்கறி பிடிபட்டதாக செய்திகள் வெளியானது அனைவரும் அறிந்ததே. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று பிடிபட்ட கறிகளை வேளச்சேரியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், ஆய்வின் முடிவில் தான் அது என்ன கறி என்று தெரியும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதற்குள் பிடிபட்டது நாய்க்கறி தான் என்றும், சென்னையில் உள்ள தனியார் ஓட்டல்களுக்கு அவை சப்ளை செய்யவே வந்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகின.

இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்து பலர் சைவைத்திற்கு மாறிவிட்டனர். நேற்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தும் பெரும்பாலான பிரியாணி கடைகளிலும், அசைவ உணவகங்களிலும் வியாபாரம் பெருமளவு குறைந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆய்வின் முடிவில் நாய்க்கறி என்பது உறுதி செய்யப்பட்டால் அசைவ உணவகங்களின் விற்பனை பெருமளவு அடிவாங்கும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே கார்த்திகை மாதம் என்பதால் அசைவ உணவகங்களிலும், கறிக்கடைகளிலும் விற்பனை மந்தமாக இருக்கும் நிலையில் தற்போது நாய்க்கறி சர்ச்சையும் சேர்ந்துள்ளதால் விற்பனை படுபயங்கரமாக சரிந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்