திமுக தலைவர் முக.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி: அதிர்ச்சியில் தொண்டர்கள்

வெள்ளி, 11 டிசம்பர் 2020 (10:57 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் சற்று முன்னர் சென்னை கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பிரதான எதிர்கட்சியான திமுக தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக கவனித்து வருகிறது மேலும் உதயநிதி உள்பட ஒருசில தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை வெள்ளம் காரணமாக பொதுமக்கள் திண்டாடும் பகுதிகளுக்கு தானே நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி திமுக தலைவர் முக ஸ்டாலின் வழங்கி வருகிறார்
 
இந்த நிலையில் சற்றுமுன் கொளத்தூரில் அவர் நிவாரண உதவிகளை வழங்கி கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அவர் கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது   

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்