ஆளுனரே வெளிய போக சொன்னார்.. முழு கூட்டத்தொடரும் புறக்கணிப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (11:53 IST)
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுனரின் நடவடிக்கையை கண்டித்து ஆளுனர் உரை மீதான கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக தெரிவித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடப்பு ஆட்சியின் கடைசி சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. தேர்தல் பணிகள் தொடங்க இருப்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் வகையில் இந்த கூட்டத்தொடர் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கூட்டத்தொடரின் தொடக்கமாக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை வாசிக்க தொடங்கும் முன்னரே எழுவர் விடுதலை குறித்டு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

அதற்கு ஆளுனர் பன்வாரிலால் புரோகித் உரையின் மீது விருப்பம் இல்லையென்றால் 5 நிமிடம் வெளிநடப்பு செய்துவிட்டு வாருங்கள் என பரிந்துரைத்தது எதிர்கட்சிகளை அதிர்ச்சியடைய செய்தது. ஆளுனரின் இந்த செயலை கண்டித்து ஆளுனர் உரைமீதான முழு கூட்டத்தொடரையும் புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்