இருக்குற தலவலி போதாதுனு ... தேமுதிகவால் கடுப்பில் அதிமுக தலைமை!!

செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (11:40 IST)
தேமுதிக தங்களுக்கு ஒரு எம்பி பதவி வேண்டும் என கோரியிருப்பது அதிமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் ஒன்றாக அமைந்துள்ளது என தெரிகிறது. 
 
ஏப்ரல் மாதத்தில் 3 மாநிலங்களவை எம்பி பதவி காலியாகிறது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களின் பலத்தில் அடிப்படையில் திமுக, அதிமுகவில் இருந்து தலா 3 பேரை தேர்வு செய்யும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. 
 
தற்போது இந்த பதவியை பிடிக்க அதிமுகவில் கடும் போட்டி நிலவி வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர்கள் ஒரு பக்கம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் எம்பிக்க்ள் யாரும் இல்லை என வர்கள் பக்கம் போர்கொடி தூக்கியுள்ளனர். 
 
போதாத குறைக்கு தேமுதிகவும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தர வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகிறது. எனவே அதிமுக தலைமை என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகிறது. 
 
அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேமுதிக கேட்ட ஒரு சீட்டை ஒதுக்காத நிலையில் கூட்டணியை பிளவுபடுமா? அல்லது இதை வாய்ப்பாக பயன்படுத்தி தேமுதிகவை அதிமுக கழற்றிவிடுமா என பொருத்திருந்து தான் தெரிந்துக்கொள்ள வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்