பங்குனி மாத பிரதோஷம் பெளர்ணமி.. சதுரகிரி கோயிலுக்கு செல்ல இன்று முதல் அனுமதி!

Mahendran

வெள்ளி, 22 மார்ச் 2024 (13:41 IST)
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் அமாவாசை, பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டுக்காக செல்வது வழக்கமாக இருக்கும் நிலையில் பங்குனி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டிற்காக இன்று முதல் மார்ச் 25 வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறை அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இன்று முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலை கோயிலுக்கு செல்லலாம் என்றும் ஆனால் அதே நேரம் கோடை காலம் என்பதால் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை அறிவித்துள்ளது

மேலும் எதிர்பாராத வகையில் இயற்கை பேரிடர் நேர்ந்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது

இந்த நிலையில் பங்குனி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டிற்காக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து ஏராளமான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்