பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப் பேரணிக்கு அனுமதி மறுப்பு

sinoj

வெள்ளி, 15 மார்ச் 2024 (15:13 IST)
கோவையில் வரும் 18 ஆம் தேதி பிரதமர்  நரேந்திரமோடி பங்கேற்கும் வாகனப் பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜக கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் சமீபத்தில் 2 வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதிலும், தமிழக வேட்பாளர்கள் இடம்பெறாத நிலையில், மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தபின், இதுகூறித்து அறிவிக்கப்படும் என தகவல் வெளியானது.
 
இந்த நிலையில்,  கன்னியாகுமரி மாவட்டம்  அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
 
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி திமுக அரசை விமர்சித்தார்.
 
இந்த நிலையில், கோவையில் வரும் 18 ஆம் தேதி பிரதமர்  நரேந்திரமோடி பங்கேற்கும் வாகனப் பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
 
அதாவது பொதுத்தேர்வு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் அனுமதி வழங்கவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 
பிரதமருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என்ற காரணத்தாலும், அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்