கொரோனா நிவாரண நிதியை பொதுமக்கள் தாராளமாக வழங்க வேண்டும் - முதல்வர் பழனிசாமி

செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (16:35 IST)
கொரோனாவில் வீரியம் நாளாக நாளாக அதிகரித்த வண்ணமே உள்ளபடியால் இந்தியாவில், ஊரடங்கு தளர்த்துவது குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், நாடு தழுவிய ஊரடங்கை தளர்த்துவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு யோசித்து வருவதாக  தகவல் வெளியாகிறது.

மேலும், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் மற்றும் நிபுணர்கள்  மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அதனால் இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகிறது.

இந்நிலையில்,ஊரடங்கு உத்தரவால் மக்கள் பெரிதளவில் பாதிப்புக்கு ஆளான நிலையில், கொரோனா நிவாரண நிதியை மக்கள் தாராளமான தர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

கொரோனா நிவாரண நிதியை பொதுமக்கள் தாராளமாக வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் வேண்டுகோள். சிறு துளி பெரு வெள்ளம் எனும் முதுமொழிக்கு ஏற்ப அனைவரும் குறைந்த தொகையை வழங்கினாலே ஏழை எளிய மக்களை காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்..

மேலும், பேரிடர் நேரத்தில் சிறு தொகை கூட ஏழை, எளிய மக்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினை திடமாக எதிர்கொண்டு சமாளிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளை செம்மையாக செய்யவும் அனைவரது பங்களிப்பையும் அரசு நாடுகிறது.

"சிறுதுளி பெருவெள்ளம்" என்பதற்கேற்ப தமிழகத்தில் ஒவ்வொருவரும் சிறுதொகை வழங்கினாலே இப்பேரிடர் நேரத்தில் ஏழை, எளிய மக்களை காக்க பேருதவியாக இருக்கும். pic.twitter.com/94IuhEqW23

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 7, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்