ஆடி பெருக்கு; காவிரி ஆற்றில் கூட தடை! – கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (15:01 IST)
தமிழகத்தில் கொரோனா பரவம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஆடிபெருக்கு விழாவிற்கு காவிரி ஆற்றில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோவை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாளை மறுநாள் ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் கொண்டாடப்பட உள்ளது. ஆடிப்பெருக்கு அன்று பலரும் காவிரி ஆற்றுக்கு சென்று வழிபடுவது வழக்கமான ஒன்று. ஆனால் தற்போது கொரோனா பரவல் அபாயம் உள்ள சூழலில் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், கரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரை மற்றும் குளித்தலை திருக்கடம்பத்துறை ஆகிய இடங்களில் பொதுமக்கள் கூடவும், வழிபாடு செய்வதற்கும் அனுமதி இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்