விபிஎஃப் நாங்க கட்டுறோம்; வசூலில் பாதியை தருவீங்களா? – தயாரிப்பாளர்களுக்கு கேள்வி!

வியாழன், 5 நவம்பர் 2020 (12:30 IST)
தமிழகத்தில் கொரோனா தளர்வுகள் அளிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் இடையே உள்ள பிரச்சினையால் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போதைய தளர்வுகளில் திரையரங்குகளை நவம்பர் 10 முதலாக திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் விபிஎஃப் தொகையை செலுத்துவது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே பிரச்சினை எழுந்துள்ளதால் புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

விபிஎஃப் கட்டணங்களை திரையரங்குகளே செலுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் கூறி வருகிறது. இதற்கு ஒப்புக்கொண்டுள்ள தற்போது பேசியுள்ள திரையரங்க உரிமையாளர்கள் “விபிஎஃப் கட்டணங்களை நாங்கள் ஏற்க தயார். ஆனால் பட வசூலில் 50 சதவீதத்தை திரையரங்குகளுக்கு தயாரிப்பாளர்கள் தர வேண்டும்” என நிபந்தனை விதித்துள்ளனர். இந்த வாக்குவாதத்தால் தீபாவளிக்குள் படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்