நாளை முழு முடக்கம்: தீவிர கண்காணிப்பில் சென்னை!!

சனி, 22 ஆகஸ்ட் 2020 (18:33 IST)
சென்னையில் நாளை முழு முடக்கம் என்பதால் 193 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு இருக்கும் என காவல்துறை தகவல். 
 
கொரோனா பாதிப்பினால் இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் உள்ள நிலையில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு முடிந்த நிலையில் 7 ஆம் கட்ட ஊரடக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.  
 
கொரோனா காரணமாக ஜூலை மாதம் முழுவதும் எல்லா ஞாயிற்றுக் கிழமையும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதேபோல ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னையில் நாளை முழு முடக்கம் என்பதால் 193 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு இருக்கும் என காவல்துறை அறிவித்துள்ளது. 
 
நாளை பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் தவிர மற்ற செயல்பாடுகளுக்கு அனுமதியில்லை எனவும் ஊரடங்கை மீறி வேறு வாகனங்கள் வந்தால் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவையின்றி வெளியே வருவது, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை கோரியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்