பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு – அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் !

ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (08:41 IST)
சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் தொடங்கி வைத்தார்.

சென்னையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவை அட்சயப்பாத்திரம் எனும் நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் மூலம் 5000 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் விதமாக 20000 மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் உணவு கிடைப்பதற்கான விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காகச் சமையற்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை கிரீம்ஸ் சாலையில் நேற்று நடைபெற்றது. ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ‘இந்த சமையல் கூடங்களுக்கு இடத்தை அளிப்பதுடன், குடிநீர், மின்சார கட்டணங்களை மாநகராட்சியே செலுத்தும். மேலும் இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்