சென்னை தான் பெரிய தொல்லையா இருக்கு: ஈபிஎஸ்!!

புதன், 29 ஏப்ரல் 2020 (11:36 IST)
தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி தகவல். 
 
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே இருந்த நிலையில் அரசும் மாவட்ட நிர்வாகமும் சீரிய நடவடிக்கை எடுத்தபோதிலும் மக்களின் ஒத்துழைப்பு இல்லை. இதனால் நேற்று சென்னையில் ஒரே நாளில் 103 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.  
 
குறிப்பாக வடசென்னை பகுதிகளான ராயபுரம், தண்டையார் பேட்டை, திருவிக நகர் மண்டலங்களில் வசிக்கும் மக்கள் ஊரடங்கு உத்தரவை கண்டுகொள்ளவே இல்லை. சென்னை நகர வாசிகள் ஊரடங்கை மதித்து, விழிப்புடன் இல்லாவிட்டால் கொரோனாவின் ஆபத்து நீங்கப் போவதில்லை என்பது உறுதி. 
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சென்னையை தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 
 
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலியில் நடைபெற்றும் வரும் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி இவ்வாறு தெரிவித்துள்ளார். அதோடு, விவசாய பணிகளுக்கு பொது முடக்கத்தில் முழுவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் விளைப்பொருட்கள் கொண்டுசெல்வதை யாரும் தடுக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா பேரூராட்சி, நகராட்சிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்தாலும், மாநகராட்சிக்குள் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா பாதிப்புள்ள சிவப்பு பகுதியை ஆரஞ்சு பகுதியாகவும், ஆரஞ்சு பகுதிகளை பச்சை பகுதிகளாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்