இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து குறித்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திங்கள், 20 ஜூலை 2020 (12:51 IST)
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இதனையடுத்து கடந்த நான்கு மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் எப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வு ரத்து செய்யப்பட்ட அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு ரத்து குறித்த அறிவிப்பும் வெளிவர வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
 
குறிப்பாக இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்வது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இறுதி ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு குறித்த முடிவுகள் வந்த பின்னரே அவர்கள் அடுத்த பட்டப்படிப்புக்கு அல்லது வேலைக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அனைத்து பட்டப்படிப்புகளின் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய கோரிய மனு சற்றுமுன்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. இந்த விசாரணையின்போது, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதாகவும் இரண்டு வாரங்களில் மத்திய மற்றும் மாநில அரசு இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து அனைத்து பட்டப்படிப்புகளின் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவு இன்னும் இரண்டு வாரங்களில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்