24 மணி நேரத்தில் கொடிகள், பேனர்கள் அகற்றம்! – சென்னை மாநகராட்சி உத்தரவு

வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (17:17 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் சென்னையில் கொடிகள், பேனர்களை அகற்ற உத்தரவு வெளியாகியுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி மற்றும் கட்டுப்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்து வருகிறார். இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தற்போது முதல் 5 மாநிலங்களிலும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் “தேர்தல் விதிகள் அமலானதை தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்சி கொடிகள், பேனர்களை அகற்ற வேண்டும் என 24 மணி நேர அவகாசம் அளித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்