மத்திய அரசு நிதி வழங்க மறுக்கிறது - தமிழக முதல்வர்

சனி, 23 மே 2020 (18:30 IST)
தமிழக அரசுக்கு தேவையான நிதியை  வழங்க மத்தியர் அரசு மறுப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமயிலான அனைத்து துறை அதிகாரிகளுக்காக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய முதல்வர், தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்தார். தேசிய அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முதன்மையான மாநிலமாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசு இன்னும்  கொரோனா தடுப்புப் பணிக்குத் தேவையான நிதியைத் தரவில்லை என்று குற்றம்சாட்டினார்.தற்போது அமலில் உள்ள ஊரடங்கால் ஜிஎஸ்டி வருவாய் குறைந்துள்ள நிலையில் அதனை ஈடுபட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருதாகவும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்