பாவத்தின் மொத்த உருவம் தினகரன்; ஜெ. மரணத்திற்கு காரணமானவர்கள்?: ஜெயக்குமார் ஆவேசம்!

வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (09:38 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் விசாரணை ஆணையத்திலிருந்து தப்ப முடியாது எனவும், டிடிவி தினகரன் பாவத்தின் மொத்த உருவம் எனவும் விமர்சித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் இதே நாளில் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கடைசியாக கலந்து கொண்ட நிகழ்ச்சி நேற்று அவரது அபிமானிகளால் அனுசரிக்கப்பட்டது.
 
சென்ற வருடம் செப்டம்பர் 21-ஆம் தேதி தான் கடைசியாக அவரை பார்க்க முடிந்தது. அதன் பின்னர் அவர் மரணமடைந்த பிறகு டிசம்பர் 5-ஆம் தேதி தான் பார்க்க முடிந்தது. இது அதிமுக தொண்டர்களுக்கு மிகுந்த கவலையை அளித்தது. இந்நிலையில் அவரை கட்சியாக பார்த்து ஒரு வருடம் ஆன நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
 
இந்த சந்திப்பின் போது பேசிய ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற கடைசி விழாவை எங்களால் மறக்க முடியவில்லை. ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் விசாரணை ஆணையத்திலிருந்து தப்பிக்க முடியாது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரியில் குளித்ததால் காவிரி மாசடைந்து, பாவமடைந்துவிட்டதாக தினகரன் கூறியுள்ளார். ஆனால் பாவத்தின் மொத்த உருவமே தினகரன்தான் என தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்