சென்னைக்கு பார்சலில் வந்த 500 ஜோடி பறவைகள் + குரங்குகள்: பீதியில் ரெயில்வே!

புதன், 22 ஜூலை 2020 (10:51 IST)
சென்னை எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்திற்கு 500 ஜோடி பறவைகள் மற்றும் குரங்குகள் பார்சலில் வந்தது பீதியடைய செய்துள்ளது.
 
கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பார்சல்கள் கொண்டு செல்வதற்காக சிறப்பு பார்சல் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் ஹவுராவில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த பார்சல் ரயில் ஒன்றில் 500 ஜோடி பறவைகள், 2 குறில் வகை குரங்குகள் கூண்டில் அடைக்கப்பட்டு எடுத்துவரப்பட்டு இருந்தது ரயில்வே அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 
 
பின்னர் போலீஸார் இது குறித்து விசாரணையை துவங்க பறவைகள் மற்றும் விலங்குகள் சரக்கு வாகனம் மூலம் மதுரைக்கு கொண்டு செல்ல இருப்பது தெரியவந்தது. உடனே பறவைகள் மற்றும் குரங்குகளை தககவலின் பெயரில் வந்த கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். 
 
மேலும் இதில் சம்மந்தப்பட்ட மதுரையை சேர்ந்த நால்வரை போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்