கோடிக்கணக்கில் பணம் பதுக்கல் ! நீட் பயிற்சி மையங்களில் ஐடி சோதனை... பரபரப்பு சம்பவம்

சனி, 12 அக்டோபர் 2019 (18:29 IST)
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்துள்ள விவகாரம் இந்தியாவை உலுக்கி எடுத்துள்ளது.
ஏற்கனவே நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மாவட்டம் மருத்துவக் கல்லூரில் படித்தது தொடர்பான வழக்கில் மாணவன் உதித்சூர்யா இதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன், சென்னை தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகியோர் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இதனைத்தொடர்ந்து இவ்வழக்கில் பல முக்கிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ள நிலையில் காஞ்சிபுரம் சவிதா மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தேனி சிபிசிஐடி போலீஸார், வழக்கறிஞரின்  மகளான அம்மாணவியை கைது செய்து தேனி மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அம்மாணவி திடீரென அழத்தொடங்கினா. அதனால் அங்கி பரபரப்பு ஏற்பட்டது.  இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் இன்று நீட் மையங்களில் ஐடி ரெய்டு நடத்தியதில் ரூ. 30 கோடி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
 
நாமக்கல், பெருந்துறை, கரூர், சென்னை, ஆகிய இடங்களில் உள்ள   தனியார் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் வருனான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 
 
இந்த சோதனையின் போது அசையா சொத்துக்களின் ஆவணங்களையும்  பணத்தையும் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இன்று நடைபெற்ற முதற்கட்ட சோதனையில் கணக்கில் காட்டாத ரூ. 150 கோடி வருவாய் கண்டிபிடித்தனர்.பள்ளி ஆடிட்டோரியத்தில் பணத்தை பதுக்கி வைத்திருந்ததையும் கண்டுபிடித்துள்ளனர்.
 
மேலும் நீட் மையங்களில் கணக்கில் காட்டாத ரூ. 30 கோடியை ஐடி த்றையினர் பறிமுதல் செய்தனர்.அத்துடன் நீட் பயிற்சி மையங்களி அதிக ஊதியத்துடன் ஆசிரியர்களை நியமித்ததும் விசாரணையில் தெரிவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்