அணி வகுக்கும் பைக்குகள்; சாவியை தேடி அலையும் ஓனர்கள்: காவல் நிலைய கலாட்டா!

புதன், 15 ஜூலை 2020 (10:33 IST)
போலீஸாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்களின் சாவியை வாகன் ஓட்டிகள் காவல் நிலையத்தில் தேடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.       
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   
 
இம்மாதிரி போலீசாரால் பிடிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்  பைக்குகள் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்படும். அதன் பின்னர் குறைந்தது பத்து நாட்களுக்கு பைக் காவல் நிலையங்களில் வைக்கப்பட்டு பின்னர் திருப்பி கொடுக்கப்படும். 
 
அப்படி பைக் எடுக்க குறிப்பிட்ட தினத்தில் வரும் வாகன் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களின் சாவியை தேடுவதவற்குள் படாத பாடு படுகின்றனராம், குவித்து வைக்கப்பட்டுள்ள சாவிகளுக்கு மத்தியில் தங்களின் சாவியை தேடி எடுக்கும் அவல நிலை சில காவல் நிலையங்களில் ஏற்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்