அரவிந்த் கெஜ்ரிவால் எடை குறைந்ததாக குற்றச்சாட்டு- திகார் சிறை தரப்பு விளக்கம்

sinoj

புதன், 3 ஏப்ரல் 2024 (15:13 IST)
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணைமுதல்வர் மணீஸ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இதையடுத்து, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் இவ்வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
 
இவ்வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இவ்வழக்கின் விசாரணை  நடந்து வரும்  நிலையில், வரும் மக்களவை தேர்தலையொட்டி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதிலாக அவரது மனைவி சுனிதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
இந்த நிலையில், சிறையில் உள்ள கெஜ்ரிவால் முதல்வர் பதவியில் இருந்து விலகக் கூடாது என ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 
மேலும், டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 55 பேர்  நேற்று சுனிதா கெஜ்ரிவாலை நேரில் சந்தித்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 4 பேர் சிறையில் உள்ளனர்.
 
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் எடை  நான்கரை கிலோ வரை குறைந்ததாக ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டிற்கு சிறை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
 
அதில், ஏப்ரல் 1 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை 2 மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவரின் உடல் நிலை சீராகவே இருந்தது. சிறைக்கு வந்தது முதல் கெஜ்ரிவாலின் உடல் எடையும் 65 கிலோவாக உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி வீட்டில் சமைத்த உணவுதான் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்படுகிறது.
 
 உடல் நிலை சார்ந்த அவசர சூழல் ஏற்பட்டாலும் உடனடியாக சிகிச்சை அளிக்க தயார் நிலையில் குழு உள்ளது என்று திகார் சிறை தரப்பு தெரிவித்துள்ளது. 
 
மேலும், ’’அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் அமலாக்கத்துறை  நியாயமாக நடந்துகொள்ளவில்லை ; பண மோசடி தடுப்புச் சட்டத்தின் 70 வது பிரிவு அரசியல் கட்சிக்குப் பொருந்ததாது என்று ‘’டெல்லி நீதிமன்றத்தில் இன்று பரபரப்பான வாதம் நடைபெற்றது. 
 
மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில்  ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்குக்கு நேற்று  ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்