எம்ஜிஆருக்கு கோவிலே இருக்கு; இதெல்லாம் பிரச்சினையே இல்ல! – வக்காலத்துக்கு வந்த அர்ஜுன் சம்பத்

திங்கள், 27 ஜூலை 2020 (13:00 IST)
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட விவகாரத்திற்கு முதல்வர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அர்ஜுன் சம்பத் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், காவித்துண்டு அணிவித்தவர்கள் மீது புதுச்சேரி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது கருத்துகளை கூறியுள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் “எம்ஜிஆரின் நிறமே காவி நிறம்தான். அயோத்தி விவகாரத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆருக்கு கோவிலே கட்டி காவி வேட்டி அணிந்து வணங்கி வருகின்றனர். இந்நிலையில் சிலர் தேவையற்ற சர்ச்சைகளை தூண்டி இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி முதல்வர் மற்றும் துணை முதல்வரை கண்டனம் தெரிவிக்க வைத்துள்ளனர். அதிமுக –பாஜக இடையே விரிசலை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்