ஆன்லைனில் தேர்வு; ஒரு மணி நேரம்தான் அவகாசம்! – அண்ணா பல்கலைகழகம்!

புதன், 16 செப்டம்பர் 2020 (08:01 IST)
தமிழக முழுவதும் கொரோனா காரணமாக கல்லூரி இறுதி தேர்வுகள் நடைபெறாத சூழலில் தற்போது இறுதி தேர்வுகளுக்கான அட்டவணையை அண்ணா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதலாக கல்லுரிகள் திறக்கப்படாத நிலையில் இறுதியாண்டு மாணவர்களை தவிர மற்ற செமஸ்டர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்த அனைத்து பல்கலைகழகங்களும் தயாராகி வருகின்றன.

தற்போது அண்ணா பல்கலைகழகம் அதன் உறுப்பு கல்லூரிகளுக்கான ஆன்லைன் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. வழக்கமாக மூன்று மணி நேரம் நடக்கும் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக ஒரு மணி நேரம் மட்டுமே நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் 24ம் தேதி தொடங்கி 29 வரை காலை, மாலை இரண்டு வேளைகளில்  தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்