தமிழக முதல்வருடன் அன்புமணி திடீர் சந்திப்பு: என்ன பேசினார்கள்?

சனி, 29 பிப்ரவரி 2020 (22:31 IST)
மார் மார்ச் 26ஆம் தேதி தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சுறுசுறுப்பாகி வருகின்றனர். ஏற்கனவே தேமுதிக குழு ஒன்று அதிமுக தலைவர்களை சந்தித்து தங்களுக்கு ஒரு தொகுதி வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாகவும் அதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் தற்போது பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா தகுதி பேசியபடி கொடுத்து விட்ட நிலையில் அந்த கட்சி இன்னொரு தொகுதியை கேட்கிறதா? என்ற கேள்வி எழுந்தது
 
ஆனால் முதலமைச்சர் உடனான சந்திப்பு குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தபோது, ‘தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாக கூறினார். எனவே அவர் ராஜசபா தொகுதி எதுவும் கேட்கவில்லை என உறுதியாகியுள்ளது. மேலும் அவர் தனது பேட்டியில் குடியுரிமை சீர்திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையும் பாதிக்காது என்றும் அவர் தெரிவித்தார் ஏற்கனவே குடியுரிமை சட்டத்திற்கு பாமக ஆதரவு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்