அமித்ஷாவின் தமிழக வருகையின் தேதியில் திடீர் மாற்றம்..!

செவ்வாய், 6 ஜூன் 2023 (07:46 IST)
உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகையின் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 8-ம் தேதி தமிழக வரயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை வரவேற்க தமிழக பாஜகவினர் தகுந்த ஏற்பாடுகளை செய்திருந்தனர். 
 
இந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சர் அமித்ஷா ஜூன் 11ஆம் தேதி தமிழகத்திற்கு வர இருப்பதாகவும், அவரது வருகையின் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஜூன் எட்டாம் தேதி வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார் என்றும் பாஜக அரசின் ஒன்பது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அவர் பங்கே இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டம் தற்போது 11ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்