நான் தலைவன் அல்ல: என்ன ஆனது மு.க.அழகிரிக்கு?

வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (20:05 IST)
மு.க.அழகிரி ஏற்கெனவே அறிவித்தபடி கடந்த 5 ஆம் தேதி அவரது தலைமையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற்றது. 
 
இந்த அமைதி பேரணியின் நோக்கம் என்ன? என அழகிரியிடம் கேட்ட போது எனது தந்தையும், தலைவருமான கருணாநிதியின் 30 ஆம் நாள் நினைவு நாளையொட்டி இந்த அமைதி பேரணியை நடத்தினோம் என கூறியிருந்தார். 
 
இது நடந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அன்று நடந்த பேரணியில் பங்கேற்ற தனது விசுவாசிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஒரு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். 
 
அந்த கடிதத்தில், கலைஞரின் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே...
 
நான் ஒரு தலைவன் அல்ல, பேச்சுத்திறமை கொண்டவலும் அல்ல, ஒரு தனி மனிதன். என்னை தனி மனிதனான, தொண்டனாக ஏற்று என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து கருணாநிதி மறைந்த 30 வது நாளில் அஞ்சலி செலுத்த அலைகடலென் திரண்டு வந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்