6 மாதத்துக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் இயக்கம் மீண்டும் தொடங்கியது!

வெள்ளி, 16 அக்டோபர் 2020 (09:14 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது.

அதோடு செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. அதனால் 7 ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக சில கோரிக்கைகளை வைத்து இவை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஆம்னி பேருந்து சேவை துவங்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால் அரசு இதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. இதனோடு தற்போது பண்டிகை காலமும் நெருங்கி வருவதால் வேறு வழி இல்லாமல் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம் துவங்கியுள்ளது. சுமார்  6 மாதத்துக்கு பிறகு தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் 50% இருக்கைகளுடன் வழக்கமான கட்டணத்துடன் இயக்கப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்