மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை! – மனம் திறந்த ரஜினி!

வியாழன், 3 டிசம்பர் 2020 (13:50 IST)
அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள ரஜினி செய்தியாளர்கள் பேட்டியில் மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நீண்ட காலமாக அரசியல் கட்சி தொடங்குவதில் இழுபறி செய்து வந்த நடிகர் ரஜினிகாந்த் ஒருவழியாக அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது தொண்டர்கள் பல இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள ரஜினிகாந்த் ”கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றும் பின் வாங்க மாட்டேன். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் நிச்சயம் நடக்கும், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கொரோனாவால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல முடியவில்லை. எனினும் இந்த அரசியலில் ரான் வெறும் கருவிதான். மக்கள்தான் என்னை இயக்குபவர்கள். இந்த தேர்தலில் வென்றாலும், தோற்றாலும் அது மக்களுடைய வெற்றி அல்லது தோல்விதான்” என கூறியுள்ளார்

மேலும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் “அண்ணாத்த” படப்பிடிப்பை முடித்து கொடுக்க வேண்டிய கடைமை இருப்பதால், அது முடிந்ததும் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்