’’தூய்மைப் பணியாளர்களுக்கு’’ நிதி உதவி செய்த நடிகர் ராகவா லாரன்ஸ்

செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (17:38 IST)
கடந்த ஏப்ரல்  9 ஆம் தேதி நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் ரூபாய் மூன்று கோடி கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளார். இந்த 3 கோடியில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சமும், பெப்ஸி அமைப்புக்கு ரூபாய் 50 லட்சமும், நடன இயக்குனர் சங்கத்திற்கு ரூபாய் 50 லட்சமும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூபாய் 25 லட்சமும், தான் பிறந்து வளர்ந்த பகுதியான ராயபுரம் பகுதியில் தினக்கூலி செய்யும் பணியாளர்களுக்கு ரூபாய் 75 லட்சமும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
 

மேலும் இந்த ரூ.3 கோடி பணம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’சந்திரமுகி 2’ படத்தில் நடிக்க தனக்கு கிடைத்த சம்பளம் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று நடிகர் ராகவா லாரன்ஸ்,  கதிரேசன் என்பவர் தயாரிக்கும் புதிய படத்தில் நடிப்பதற்காக கிடைத்துள்ள சம்பளத்தில், ரூபாய், 25 லட்சத்தை தூய்மைபணியாளர்களுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

ராகவாலாரன்ஸின் இந்த உதவிக்கு பலரும் அவருக்குப் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Hai friends and fans, This is a very crucial time for all of us. I will try my level best to serve the needy without any expectation. God is within everyone, Service is god. pic.twitter.com/fsGSPynAw3

— Raghava Lawrence (@offl_Lawrence) April 14, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்