அறிவாலயத்துக்கு குண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி கைது!

வெள்ளி, 29 நவம்பர் 2019 (11:21 IST)
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக கட்சிக்கு சொந்தமான அண்ணா அறிவாலயத்தில் வெடிக்குண்டு வைத்திருப்பதாக ஆசாமி ஒருவர் போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார். உடனடியாக அறிவாலயத்திற்கு விரைந்த போலீஸார் மோப்ப நாய்கள் துணையோடு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் வெடிக்குண்டு எதுவும் சிக்கவில்லை.

இந்நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து போன் செய்த ஆசாமியை தேட தொடங்கினர். அவரது மொபைல் எண்ணை வைத்து ட்ராக் செய்தது மூலம் ஆசாமி தேனாம்பேட்டை அருகில் உள்ள தியாகராயநகரை சேர்ந்த கணேசன் என்பது தெரிய வந்தது.
உடனடியாக கணேசனை சுற்றி வளைத்த போலீஸ் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கணேசன் மது அருந்திவிட்டு போதையில் போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்