விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ..3 அறைகள் தரைமட்டம்..!

Siva

புதன், 24 ஜனவரி 2024 (11:25 IST)
வரதரா மாவட்டத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் மூன்று அறைகள் தரைமட்டம் ஆகியதாக தகவல் வெளியாகியுள்ளன
 
விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் இருக்கும் நிலையில் அவைகளில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சில இடங்களை அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது என்பதும் இதனால் உயிர் இழப்புகளும் ஏற்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் விருதுநகர் ஆர்ஆர் நகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து காரணமாக ஆலையில் இருந்த மூன்று அறைகள் இடிந்து விழுந்து தரைமட்டம் ஆகி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 
 
மேலும் இந்த பட்டாசு ஆலை விபத்தில் இதுவரை மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாக உள்ளது.  இந்த ஆலை விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்