தமிழகத்தில் கொரோனாவால் 621 பேர் பாதிப்பு .. 6 பேர் பலி - சுகாதார செயலர் பீலா ராஜேஷ்

திங்கள், 6 ஏப்ரல் 2020 (18:16 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக உயர்ந்து வருகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் குணமடைந்து வருகின்றனர்.


இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒருவர் உயிரிழப்பு தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்வு எனவும், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571இல் இருந்து 621ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவம்னையில் அனுமதிக்கப்பட்டிருந்த  57 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்.

புதிதாக் தொற்று கண்டறியப்பட்டுள்ள 50 பேரில் 48 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என தெரிவித்துள்ளார்.டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 1475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தமிழக  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்

சென்னையில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்