கிளம்பி வாங்கப்பா... போக்குவரத்து ஊழியர்களுக்கு அரசு அழைப்பு: பின்னணி என்ன?

சனி, 30 மே 2020 (08:42 IST)
50% பணியாளர்கள் பணிக்கு வர சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் ஆணை பிறப்பித்துள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதிகளும் தடை செய்யப்பட்டது. சிறப்பு ரயில் சேவை மட்டும் துவங்கியுள்ள நிலையில் பேருந்து சேவையும் துவங்கப்பட உள்ளது என பேசப்பட்டது.
 
புதுச்சேரி மற்றும் அண்டை மாநிலங்களான கேரள, கர்நாடகாவிலும் பேருந்து சேவை துவங்கியுள்ளது, இந்நிலையில், இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
அதன் ஒரு பகுதியாக சென்னையில் RC, FC யூனிட்டில் உள்ள 50% பணியாளர்கள் பணிக்கு வர சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பணிக்கு வரும் ஊழியர்கள் மாஸ்க், கையுறை, சானிடைசர் கட்டாயம் பயன்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
பொதுமுடக்கம் முடிந்து பேருந்துகளை இயக்கும்போது சிரமம் ஏற்படாத வகையில், பேருந்துகள் பராமரிப்பு, பழுது நீக்கும் பணிக்கு பணியாளர்கள் வர வேண்டியே இந்த திடீர் அழைப்பு என தெரிகிறது. எனவே விரைவில் பேருந்த் சேவை துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்