தர்மபுரி தொகுதியில் அதிகபட்சமாக வாக்குப்பதிவு.. பகல் 1 மணி நிலவரப்படி எவ்வளவு?

Siva

வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (13:59 IST)
தமிழகத்தில் இன்று காலை முதல் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வாக்காளர்கள் மிகவும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை வாக்களித்து வருவதை பார்க்கும் போது நிச்சயம் 70% வாக்கு சதவீதம் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

குறிப்பாக பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் அதிகபட்சமாக பகல் ஒரு மணி நேர நிலவரப்படி தர்மபுரியில் 44 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் மிகவும் குறைவாக மத்திய சென்னையில் 32 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

ஆனால் அதே நேரத்தில் தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஆரணி, கரூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமாகவும் மீதமுள்ள 11 மாவட்டங்களில் 32 முதல் 39 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்