நாளையோடு முடியும் பொதுமுடக்கம்: அடுத்த கட்ட நடவடிக்கை என்ன??

சனி, 4 ஜூலை 2020 (12:22 IST)
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு நாளையுடன் முடிகிறது. 
 
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில் நாளை அனைத்து மாவட்டங்களுக்கும் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு முன்னரே அறிவித்தது.
 
அத்தியாவசிய தேவைகளான பால், மருந்தகங்கள் மட்டுமே இயங்கும். காய்கறி, மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். அதேபோல மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். 
 
அதேபோல சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு (ஜூலை 5) நாளையுடன் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்து அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமலுக்கு வருமா அல்லது மற்ற மாவட்டங்கள் போல ஞாயிற்றுகிழமைகள் மட்டும் பொதுமுடக்கம் அமலுக்கு வருமா என அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்