12வது தேர்வு ரிசல்ட்; வழக்கம்போல பெண்கள் அதிக தேர்ச்சி! - திருப்பூர் முதலிடம்!

வியாழன், 16 ஜூலை 2020 (08:58 IST)
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் வழக்கம் போல மாணவிகள் மாணவர்களை விட அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மார்ச் மாதம் நடந்து முடிந்த 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 89.41% தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவிகள் வழக்கம்போல மாணவர்களை விட அதிகமாக 94.80% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்ட அளவிலான தேர்ச்சி பட்டியலில் திருப்பூர் மாவட்டம் 97.12% தேர்ச்சியை பெற்று தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக உள்ளது. ஈரோடு மாவட்டம் 96.99% தேர்ச்சியை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் 2120 மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதுத்தவிர 12ம் வகுப்பு தேர்வு எழுதிய 62 கைதிகளில் 50 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்