10 ஆம் வகுப்பு அசல் சான்றிதழ் இன்று வழங்கல்!

வெள்ளி, 23 அக்டோபர் 2020 (10:40 IST)
10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று வழங்கப்பட உள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் அளிக்கப்பட்டு அதற்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்