ஜூலை 2020 - எண்ணியல் பலன்கள்: 3, 12, 21, 30

புதன், 1 ஜூலை 2020 (17:05 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: நாயகர் குரு

 
எளிதில் யாருடனும் நண்பராகும் திறமை பெற்ற மூன்றாம் எண் வாசகர்களே நீங்கள் எதிலும் சிக்காமல் நழுவுவதில் கெட்டிக்காரர். இந்த மாதம் கொடுத்த  வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை  சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள்.

வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம்  காண்பீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது  சாமர்த்தியமான பேச்சால்  எல்லாவற்றையும்  திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண்  பேச்சுக்களை  குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய  நேரிடலாம். மாத தொடக்கத்தில் கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான  பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் அடைய பாடுபடுவீர்கள்.  கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.
 
பரிகாரம்: நவக்கிரகங்களில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்