ஆகஸ்ட் 2020 - எண்ணியல் பலன்கள்: 8, 17, 26

வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (10:07 IST)
8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
சனியை நாதனாக கொண்ட எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள்  நடக்கும்.

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டி இருக்கும். பெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். அரசியல்வாதிகளுக்கு நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை தவிர்ப்பதும், பாடங்களில் சந்தேகம் நீங்கி படிப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.
 
பரிகாரம்: பைரவர் வழிபாடு நன்மை தரும். நவக்கிரகங்களை வலம் வருவதும் நல்லது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்