நவராத்திரியின் எட்டாம் நாள் வழிபாடு !!

நவராத்திரியின் 8ஆம் நாள் வழிபாட்டில் சரஸ்வதி தேவியை ‘நரசிம்மதாரணி’ என்ற பெயர் கொண்டு வழிபட போகின்றோம். இன்றைய தினம் வாசலில் தாமரை  பூ கோலம் போடுவது, நம் வீட்டிற்கு அதிகப்படியான நன்மையை தேடி தரும். 

பன்னீர் ரோஜாவால் உங்கள் வீட்டில் இருக்கும் அம்மனின் சிலைக்கு அலங்காரம் செய்து விடுங்கள். முடிந்தால் மருதாணி இலைகளை கொண்டு சரஸ்வதி  தேவிக்கு அர்ச்சனை செய்யலாம். 
 
இன்றைய தினம் திராட்சைப் பழம், பால் சாதத்தை நைவேத்தியமாக வைக்க வேண்டும். பச்சை நிறம் அல்லது அரக்கு நிறம் நிறத்தில் உள்ள வஸ்திரங்களை, வீட்டில் வரும் சுமங்கலிப் பெண்களுக்கு தானமாக கொடுக்கலாம். 
 
பச்சை நிறத்திலும் அரக்க நிறத்திலும் வளையல்கள் வாங்கி கன்னிப் பெண்களுக்கும் சுமங்கலிப் பெண்களுக்கும் தானம் கொடுப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும்.  இன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய அம்பாள் வழிபாடு வேண்டிய வரத்தை, வேண்டிய மார்க்கத்திலேயே பெற்றுத் தரும் அளவிற்கு சக்தி வாய்ந்த வழிபாடாக  அமையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்