எலுமிச்சை சாறில் சிறிது உப்பு கலந்து குடிப்பதால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும். ஜீரண சக்தியை மேம்படுத்தும். மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் வேலையைச் செய்கிறது.
பலரும் இரவில் படுத்ததும் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுகிறார்கள். எலுமிச்சை சாறில் உப்பு கலந்து இரவு தூங்கும்முன் குடித்து வந்தால், நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு படித்து கொஞ்ச நேரத்திலேயே நல்ல உறக்கம் வரும்.