தைராய்டு பிரச்சனை யாருக்கெல்லாம் ஏற்படும் ஏன்...?

ஹைப்பர் தைராய்டிசம் உள்ளவர்களுக்குச் சுரப்பியின் செயல்பாடு அதிகரிப்பதால் ஹார்மோன் உற்பத்தி அதிகமாக இருக்கும். அதிக பசி உண்டாகும். ஆனாலும் உடல் மெலிந்து காணப்படுவார்கள். இதயத்துடிப்பு அதிகரிக்கும். ஆண்களுக்கு மார்பு வளர்ச்சி, தசை தளர்ச்சி, கைகால்  நடுக்கம் ஏற்படும். 
பெண்களுக்கு மாதவிடாய்க் குறைபாடு, அதிக வியர்வை மற்றும் வயிற்றுப்பிரச்னைகள் உண்டாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இதய நோய், எலும்புத் தேய்மானம், பார்வைக் குறைபாடு போன்றவை ஏற்படும். இவர்களால் அதிக வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது.
 
ஹைப்போ தைராய்டு என்பது தைராய்டு சுரப்பியின் செயல்பாடு குறைவதைக் குறிக்கும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு ஹார்மோன் குறைவாக சுரக்கும். உடல் எடை அதிகரிக்கும். பெரும்பாலும் இதய நோய், வலிப்பு நோய் மற்றும் புற்றுநோய்க்காக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளால் ஏற்படும் பக்கவிளைவுகளே இத்தகைய நிலையை உருவாக்கும். 
 
கர்ப்ப காலத்தில் ஏற்படும் இந்தக் குறைபாடு பாதிப்பு மூளையில் உள்ள `ஹைப்போதாலமஸ்' தைராய்டைக் கட்டுப்படுத்தத் தவறுவதால் ஹார்மோன் உற்பத்தி குறைந்தும் இந்தக் குறைபாடு ஏற்படலாம். ஹைப்போ தைராய்டு உள்ளவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாது. தோலில் வறட்சி, அடிக்கடி சளி பிடித்தல், உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமை போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்