பித்தம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் இலந்தை பழம் !!

இலந்தை பழம் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை வாய்ந்தது. உடல் உஷ்ணத்தால் அவதிப்படுத்துவார்கள் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் உடற்சூடு தணிந்து, நீர் சத்து இழப்பை சரி செய்கிறது.

கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஞாபக திறன் மிகவும் முக்கியம் எனவே மாணவர்கள் ஞாபக சக்தியை ஊக்குவிக்கும் இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு  வருவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
 
இலந்தை பழம் நரம்புகளுக்கு வலிமையை தரும் ஆற்றல் பெற்றிருக்கிறது. இந்த இலந்தை பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தூக்கமின்மை குறைபாடு  நீங்கும்.
 
இலந்தை பழங்களில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் இலந்தை பழங்களை தினமும் சாப்பிடவதால் எலும்புகள் வலிமை பெறும்.
 
இலந்தை பழத்திற்கு பித்தத்தின் அளவை சமசீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது. எனவே பித்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டவர்கள் இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
 
இலந்தை பழங்களை சாப்பிடுவதால் பயணங்களின் போது ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு புத்துணர்ச்சியை தரும்.
 
இலந்தை பழங்களை சாப்பிட்டால் சீக்கிரத்திலேயே உடல் வலி மற்றும் உடற்சோர்வு நீங்க பெறுவார்கள். உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.
 
இலந்தை பழத்திற்கு ரத்தத்தில் இருக்கும் மாசுகளை நீக்கி ரத்ததை சுத்தப்படுத்தும் ஆற்றல் உள்ளது எனவே. அடிக்கடி இலந்தை பழங்களை சாப்பிடுவதால் ரத்த  சுத்தி ஏற்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்