சளி மற்றும் இருமலை முற்றிலும் விரட்டும் மிளகு...!!

மிளகு ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பிற செரிமான சாறுகள், அதிக அளவு சுரக்க உதவுகின்றது. இவை, உணவு பொருட்களை உண்டைத்து, எளிதாக ஜீரணமாக உதவுகின்றது. 

மல சிக்கல், மற்றும் வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது. இது மட்டுமல்லாது, மிளகு வயிற்றில் இருக்கும் வாயு  பிரச்சனையையும் போக்க உதவுகின்றது.
 
மிளகு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது. இது வயிற்று பகுதிகளிலும், உடலில் உள்ள பிற பகுதிகளிலும் கொழுப்பு சேராமல், அவற்றை கரைக்க உதவுகின்றது. இதனால், உடல் எடை அதிகரிப்பதும் குறைந்து சீரான உடல் எடையைப் பெற உதவுகின்றது.
 
சுவாச பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், அதனை போக்க மிளகு பெரிதும் உதவுகின்றது. மிளகு, சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும் ஒரு முக்கிய மூலிகையாக செயல்படுகின்றது. 
 
மிளகு சுவாச குழாயில் இருக்கும் அடைப்பை போக்கி, சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க இது அதிக அளவு உதவுகின்றது.
 
எந்த விதமான சுவ பிரச்சனைகளையும் எளிதாக போக்க மிளகு உதவும். இந்த வகையில் இதில் இருக்கும் சளி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் எளிதாக  ஆஸ்த்மா அறிகுறிகளை குணப்படுத்த உதவும். மேலும் சுவாச குழாயை தெளிவுபடுத்தி எளிதாக சுவாசிக்கவும் உதவும்.
 
நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவது மிளகின் ஒரு சிறப்பு அம்சமாகும். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள், நோய்களை எதிர்த்து போராட உதவுகின்றது. இதனால் நோய் பரவுவதும் குறைந்து, விரைவில் குணமடைய உதவுகின்றது. மேலும் தமனிகள் சுவற்றில் இருந்து கொழுப்பை அகற்றி சுத்தமாக  வைத்திருக்க உதவுகின்றது.
 
மிளகு, சிறுநீர் மற்றும் வியர்வை மூலமாக உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவும். மேலும் உடலில் இருக்கும் அதிக அளவிலான நீரையும் வெளியேற்ற உதவும். மேலும் சிறுநீர் மூலமாக தேவையற்ற கொழுப்பு உடலில் இருந்தால், அதனையும் வெளியேற்ற உதவும். இதனால் தமனிகளும் சுத்தமாகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்