வாரம் ஒருமுறை சிறுபசலை கீரை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள் !!

சிறு பசலை கீரையை கடுமையான இரத்தப் போக்கு மற்றும் அடி வயிற்று வலி ஏற்படும் மாதவிடாய் காலங்களில் பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

சிறு பசலை கீரை சாப்பிடுவதால் அதிலிருக்கும் சத்துகள் ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. வெளியிலிருந்து உடலுக்குள்  வரும் நோய்களை உண்டாகும் ஆபத்தான நுண்ணுயிரிகளை எதிர்த்து, அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வாறு காக்கிறது.
 
சிறு பசலை கீரையை புற்று நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் புற்று செல்கள் மீண்டும் வளராமல் தடுத்து, அந்நோயின் கடுமை தன்மையை குறைக்க முடியும்.
 
நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகள் உண்பது, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்ற காரணங்களால் சிலருக்கு மூலம் நோய் ஏற்படுகிறது. இவர்கள் தினமும்  பச்சையாக சிறிது சிறு பசலை கீரையை சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும்.
 
சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல், வறட்டு இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும் சிறிதளவு சிறு பசலை கீரை மற்றும் அதன் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின் கடுமையை குறைக்கும்.
 
சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை சிறு பசலை கீரை சமைத்து சாப்பிடுவது நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்